தருமபுரி, ஆக 22 | ஆவணி 6 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (INDRSETI) மூலம், சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியன் வங்கி சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் உதவி, சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற வாழ்வியல் திறன்களையும் பயிற்சியோடு இணைத்து வழங்குகிறது.
பயிற்சியின் போது காலை, மதிய உணவு, இருவேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி ஆகியவையும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனையும், வங்கிக் கடன் பெற வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
தொடங்க உள்ள பயிற்சிகள்:
-
குழாய் பொருத்துதல் (பிளம்பிங்) – 30 நாட்கள்
-
வீட்டு மின் உபகரணங்கள் பழுது பார்த்தல் – 30 நாட்கள்
-
மரவேலை – 30 நாட்கள்
-
பொருள் பற்ற வைத்தல் வெல்டிங் & கட்டுருவாக்கம் (Fabrication) – 30 நாட்கள்
முக்கிய தகவல்கள்:
-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.09.2025
-
வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை
-
கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு:
-
இயக்குனர், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கலெக்டர் அலுவலக வளாகம், தருமபுரி.
-
தொலைபேசி: 04342-230511
-
கைபேசி: 8667679474 / 9442274912