தருமபுரி, ஆக 12 | ஆடி 27 -
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தருமபுரி இயக்கமும் பராமரிப்பும் பிரிவு தெரிவித்துள்ளது: சோகத்தூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையம் மற்றும் அதகபாடி 33/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக 13.08.2025 (புதன்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
குமாரசாமிபேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, மாந்தோப்பு, ஏ.ஜெட்டி அள்ளி, அதகபாடி, பேடர அள்ளி, நியூ காலணி, இண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், நெசவாளர் காலணி, ஏ.ஆர்.கோட்ரஸ், நேதாஜி பைபாஸ் ரோடு, அப்பாவுநகர் சோகத்தூர், இரயில் நிலையம், பங்குநத்தம், பென்னாகரம் மெயின் ரோடு, சோம்பட்டி. மின்சாரம் நிறுத்தப்படும் நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு TNEB கேட்டுக் கொண்டுள்ளது.