தருமபுரி, ஆக 13 | ஆடி 28 -
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தருமபுரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை NDSO, V4U TRUST, மற்றும் மை தருமபுரி அமைப்பினர்கள் ஒருங்கிணைத்து நடத்தியனர்.
புத்தாடைகள் பூகானஅள்ளி, பனங்கள்ளி, நக்கல்பட்டி, எண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தேவையான புத்தாடைகள் சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு அனுப்பி வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அசோக் குமார், மலர்விழி, ராமன், காவேரி மற்றும் ஆசிரியர்கள் பிரேமா, சியாமளா தேவி, கவிதா, பிரியதாருணி, வடிவேல், கௌசல்யா தலைமையில் மாணவர்களுக்கு புத்தாடைகளை வழங்கினர்.
NDSO மாநில ஒருங்கிணைப்பாளர் V4U பிரகாஷ், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், சையத் ஜாபர், தன்னார்வலர் கணேஷ், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருண் ஆகியோர் மாணவர்களுடன் சேர்ந்து புத்தாடைகளை வழங்கி, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
.gif)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)