Type Here to Get Search Results !

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.


தருமபுரி, ஆகஸ்ட் 15, 2025 (ஆடி 30)  – 


தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி நகர மன்ற தலைவி லட்சுமி நாட்டான் மாது கலந்து கொண்டு, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் நகராட்சி ஆணையர் சேகர், திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies