Type Here to Get Search Results !

தருமபுரியில் செப்டம்பர் 14-ஆம் தேதி 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்; விண்ணப்பிக்க அழைப்பு.


தருமபுரி, ஆக 14 | ஆடி 29 -


தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2025-2026 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் சட்டமன்ற அறிவிப்பு எண் 1 படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதி வாய்ந்த 1,000 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடத்தி வருகிறது. இதில், ஒவ்வொரு ஜோடிக்கும் 4 கிராம் தங்க திருமாங்கல்யம் உட்பட ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகின்றன.


இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தருமபுரி உதவி ஆணையர் பிரிவில் இரண்டாம் கட்டமாக 18 ஜோடிகளுக்கு வரும் 14.09.2025 அன்று, திருக்கோயில்கள் சார்பில் இலவச திருமண விழா நடத்தப்படும். இலவச திருமணத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பத்தை தருமபுரி உதவி ஆணையர் அலுவலகம், திருக்கோயில் அலுவலகங்கள் மற்றும் சராக ஆய்வாளர் அலுவலகங்களில் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies