தருமபுரி, ஆகஸ்ட் 11, 2025 | ஆடி 25 –
தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குள், அடையாளம் தெரியாத ஆறு ஆதரவற்றோர் (நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள்) உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தியபோதும், இவர்களின் அடையாளம் மற்றும் குடும்பத்தினர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, நகராட்சி பச்சையம்மன் கோவில் மயானத்தில் மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். நிகழ்வில் தருமபுரி நகர காவல் நிலைய தலைமை காவலர் பாக்கியராஜ், காவலர் நக்கீரன், அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் சண்முகம், கிருஷ்ணன், சையத் ஜாபர் மற்றும் தன்னார்வலர்கள் கணேஷ், குணசீலன் ஆகியோர் பங்கேற்றனர். மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின் மூலம் இதுவரை 158 ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.