பாலக்கோடு, ஆக. 01 | ஆடி 16 -
தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில் 861 விவசாயிகள் வழங்கிய 31,473.988 மெட்ரிக் டன் கரும்பிற்கான தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை ரூ.1.09 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவுசெய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் வழங்கப்படும் ஊக்கத் தொகை, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசாணை (MS) எண்.185, தேதி 30.06.2025ன் படி ஒதுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 2025-26 நடவுப் பருவத்தில் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கான மானிய திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார்.
-
அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவிற்கு ஏக்கருக்கு ரூ.7,450 மானியம்
-
அகலபாருடன் கூடிய ஒரு பருவிதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200 மானியம்
இதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு, ஆலையில் பதிவு செய்து பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.