பென்னாகரம், ஜூலை 31 | ஆடி 15 -
பென்னாகரம் புறவழிச்சாலை, இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி 90 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 2.50 கிலோமீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தார் சாலை அமைக்கும் பணிகளை தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலையில் சரியான அளவு தார் கலவை ஊற்றப்பட்டுள்ளதா, சாலை அகலம் மற்றும் தரம் விதிமுறைக்கு ஏற்ப உள்ளதா என்பதை அவர் பரிசோதித்தார்.
இந்த ஆய்வில் பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன், தர்மபுரி தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் பிரேமா ராணி, பென்னாகரம் உதவி பொறியாளர் சிங்காரவேலு, தர்மபுரி தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் மன்னர்மன்னன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.