தருமபுரி, ஆக.25 | ஆவணி 9 -
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கேப்டன் பிறந்தநாள் “வறுமை ஒழிப்பு தினம்” ஆகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தருமபுரி பிடமனேரி மாரியம்மன் கோவில் அருகே ஒன்றிய செயலாளர் மற்றும் தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விக்னேஷ் குமார் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் கலந்து கொண்டு, கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மேலும், மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கழக உயர்மட்ட குழு உறுப்பினர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருமூர்த்தி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, பொறியாளர் அணி செயலாளர் பிரகாஷ், இளைஞரணி துணை செயலாளர் செந்தாமரைகண்ணன், பொறியாளர் அணி துணை செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாணவர் அணி துணைச் செயலாளர் விக்னேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜம்பேறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.