தருமபுரி, ஆக. 25 / ஆவணி 9 -
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பள்ளப்பட்டி கிராமத்தில் ஆதி பவுண்டேஷன் சார்பாக நட்டு வளர்க்கப்பட்டு வரும் குறுங்காட்டை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
பார்வையின் போது, குறுங்காடு பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்குமரன் மற்றும் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதி மூர்த்தி உடன் கலந்து கொண்டனர்.
திட்ட இயக்குனரின் வருகைக்கு ஆதி பவுண்டேஷன் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.