பாலக்கோடு, ஆக 04 | ஆடி 19 -
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் போலீசார் நேற்று மாலை கொலசனஅள்ளி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வேப்பிலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (27) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சட்டைப் பாக்கெட்டில் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.