மாரண்டஅள்ளி, ஆகஸ்ட் 17 (ஆடி 31):
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள வட்டகானம்பட்டி கிராமத்தை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் சந்தோஷின் மனைவி திரௌபதி (30) நேற்று முன்தினம் தமது நிலத்தில் தீவன புல் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நாகேஷ் (37) அங்கு வந்து, புல் அறுக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு தீவிரமான நிலையில், அவர் திடீரென திரௌபதியை கன்னத்தில் அறைந்ததுடன், கீழே கிடந்த கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த திரௌபதி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நாகேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.