பாலக்கோடு, ஆகஸ்ட் 17 (ஆடி 31):
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில், 79வது சுதந்திர தின விழா தின நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவர் இந்துமதி முன்னிலை வகித்தார் இதில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தேசிய கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார். அதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் தேசபற்று குறித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கைளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், கவுன்சிலர்கள், ஜெயந்திமோகன், மோகன், ரூஹித், சாதிக்பாஷா, வகாப்ஜான், திமுக நகர அவைத் தலைவர் அமானுல்லா, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரன், ஒன்றிய துணை செயலாளர் மாதேஷ், கிளை செயலாளர்கள் ராஜீ, ராமமூர்த்தி, மியான், ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஸ்ரீதர், அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.