பாலக்கோடு, ஆகஸ்ட் 17 (ஆடி 31):
இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முனிவேல் மனமுடைந்து, வீட்டிற்கு வராமல் இருந்தார். மொபைல் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர் தனது செல்போனில் லொகேஷன் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் ஊர் பொதுமக்கள் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, திருமல்வாடி காப்புக்காடு பகுதியில் கருவேல மரத்தில் முனிவேல் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். உடனடியாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். குடும்பத் தகராறில் மனமுடைந்து முனிவேல் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, மரணத்திற்கு காரணமான சூழல்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துயரத்தை சமாளிப்போம் – நம்பிக்கையுடன் வாழ்வோம்.
உங்களோ, உங்களுக்குத் தெரிந்தவர்களோ மன அழுத்தம், கவலை, அல்லது வாழ்க்கையை முடிக்க நினைக்கும் நிலையை சந்தித்து வருகிறீர்களா? உடனடியாக உதவி பெறுங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்: பிரச்சினைகள் தற்காலிகம், ஆனால் வாழ்க்கை மிக மதிப்புமிக்கது. நம்பிக்கையுடன் உதவி தேடுங்கள்.