தருமபுரி – ஆகஸ்ட் 25 (ஆவணி 9):
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில், தேமுதிக சார்பில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர், நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர், மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, கழக உயர்மட்ட குழு உறுப்பினர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், கிழக்கு மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மேற்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ்குமார், சரவணன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.