பொம்மிடி – ஆக. 26 (ஆவணி 10) -
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி.பள்ளிபட்டி அருகே உள்ள அஜ்ஜம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
விவசாயி, பொம்மிடி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக தகவல் அறிந்த பொம்மிடி காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த விவசாயியின் உடல் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.