பாப்பாரப்பட்டி, ஆக. 28, 2025 | ஆவணி 12 -
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில், பி.கே.எஸ். திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் ஆயிஷா தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி முகாம் தொடங்கப்பட்டது.
முகாமில் வருவாய்த் துறை அலுவலர் சுஜாதா, துணை வட்டாட்சியர் குமரன், பேரூராட்சி தலைவர் விருந்தா நடராஜ், துணைத் தலைவர் மல்லிகா ராஜி, நகர செயலாளர் சண்முகம், பேரூராட்சி கிளார்க் சபரி ஆகியோர் பங்கேற்றனர்.
அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மொத்தம் 1,000க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர். அதில் இன்று மட்டும் 200 பயனாளிகளின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்றதால் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

