
பென்னாகரம், ஆக. 28 (ஆவணி 12) -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாதேஆள்ளி ஊராட்சி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாதேஆள்ளி, ஆச்சாரஆள்ளி, வேப்பி அள்ளி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், சக்திவேல், ஆச்சார ஆள்ளி ஊராட்சி செயலாளர் சரவணன், வேப்பி அள்ளி செயலாளர் சண்முகம், மாதே ஆள்ளி செயலாளர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர். இதில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீடு, இலவச வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
மொத்தம் 800க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்த நிலையில், இன்று மட்டும் 80 பயனாளிகளின் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றதால் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
