தருமபுரி, ஆக.15 | ஆடி 30 –
தருமபுரி மாவட்டத்தில் ‘பசுமை தருமபுரி’ இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதலில் சிறப்பாக பங்கேற்ற ‘ஆதி பவுண்டேஷன்’ அமைப்பிற்கு, 79-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் ஆட்சித்தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூர் பள்ளப்பட்டி கிராமத்தில், ‘ஆதி பவுண்டேஷன்’ சார்பில் 700 மரக்கன்றுகள் நட்டு, சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆட்சித்தலைவர் நேரடியாக மரக்கன்றுகள் நட்டார்.
இந்த பங்களிப்பை பாராட்டும் விதமாக, சுதந்திர தின விழாவில் ஆதி பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் ஆதி, நிர்வாக குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், பிரபு, அருள், கோவிந்தசாமி, விக்னேஷ், பெரியசாமி, சின்னதுரை, தம்பிதுரை, சிரஞ்சீவி, பிரேம்குமார், ஆனந்தன், விஜி, மனோஜ் குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, டி.என்.சி. பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் எல். விவேகானந்தன், சிக்மா பா. சந்திரசேகர், ஊராட்சி இயக்குநர் விமல் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.