பென்னாகரம், ஆக. 19 | ஆவணி 3 –
தருமபுரி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த 21.07.2025 முதல் எள் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ளூர் வியாபாரிகள் எள் கிலோவை ரூ.80 வரை மட்டுமே கொள்முதல் செய்து வந்தனர். ஆனால் வெளியூர் வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றதன் மூலம், கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதலான விலை கிடைத்ததால், விவசாயிகள் அதிக வருமானம் பெற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுவரை மொத்தம் 899 குவிண்டால் எள் சுமார் 82 இலட்சம் ரூபாய் மதிப்பில், பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தின் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 276 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர். இந்த முயற்சி, விவசாயிகளுக்கு போட்டித் தன்மையுடன் சிறந்த விலை கிடைக்க உதவுவதோடு, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)