தருமபுரி, ஆகஸ்ட் 10 (ஆடி 25) -
தருமபுரியில் நடைபெறவுள்ள 7ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் மேடையில் தங்கள் புத்தகங்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்களின் படைப்புகளை குறைந்த செலவில், உயர்ந்த தரத்தில் பதிப்பித்து தருவதாக கவித்தேடல் பதிப்பகம் நிறுவனர் கவித்தேடல் கோகுல் காளியப்பன் தெரிவித்துள்ளார்.
கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, புத்தகம் வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள் தங்கள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்புகளை முன்கூட்டியே அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும் விவரங்களுக்கு 79047 30223, 94457 42500 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.