தருமபுரி, ஆகஸ்ட் 10 (ஆடி 25):
நாடு மற்றும் மாநில அளவிலான போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு, அரூரில் செயல்படும் ஆதி பயிற்சி மையம் சார்பில் ஓராண்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வகுப்புகள் செப்டம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும்.
ஆர்வமுள்ள போட்டித் தேர்வர்கள், கீழே வழங்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து, வரும் ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 24 அன்று ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி ஆணையர் டாக்டர் ஆனந்தகுமார் IAS தலைமையில் வகுப்புகள் துவங்கும்.
மேலும் விவரங்களுக்கு 93618 31524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Google படிவ இணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd70Qzv3289hDeSfrgDb18ZAfHnoaOuM_GAV4t6ggH-YNLzyg/viewform?usp=header