தருமபுரி, ஆக. 19 | ஆவணி 3 –
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்திய “முதல்வரின் முகவரி” திட்டம், தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: முதலமைச்சரின் தனிப்பிரிவு, உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு மற்றும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு, தற்போது “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 2,17,390 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 2,17,082 மனுக்கள் தீர்வு செய்யப்பட்டு பொதுமக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். இத்திட்டம், மக்கள் குறைகளை உடனுக்குடன் கவனித்து, துல்லியமான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)