தருமபுரி, ஆகஸ்ட் 6, 2025 | ஆடி 21 –
தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 104 உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இது தொடர்பான ஆள்சேர்ப்பு அறிவிப்பு எண் 1/2025 மற்றும் 2/2025 வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.08.2025 மாலை 5.45 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் – 16 உதவியாளர்
-
பிற கூட்டுறவு சங்கங்களில் – 88 உதவியாளர் / நுகர்சலார் பணியிடங்கள்
கல்வித் தகுதி:
-
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10+2+3 முறையில்)
-
கூட்டுறவு பயிற்சி சான்றிதழ் கட்டாயம்
-
B.Com / M.Com / MBA (Co-op) உள்ளிட்ட பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்
-
கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு தேவை
முக்கிய தேதிகள்:
-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025
-
எழுத்துத் தேர்வு நாள்: 11.10.2025 (காலை 10.00 மணி முதல்)
தேர்வு முறை:
-
எழுத்துத் தேர்வு – Objective Type – 200 கேள்விகள் (170 மதிப்பெண்களுக்கு)
-
நேர்முகத் தேர்வு (15% விகிதம்)
-
இறுதித் தேர்வு மொத்த மதிப்பெண் அடிப்படையில் நடக்கும்
விண்ணப்பக் கட்டணம்:
-
பொதுப்பிரிவு: ₹500
-
SC/ST மற்றும் பிற பிரிவுகள்: ₹250(ஆன்லைன் மூலமாக மட்டும் செலுத்த வேண்டும்)
ஆன்லைன் விண்ணப்ப முகவரி: www.drbdharmapuri.net
மேலும் விவரங்களுக்கு: 📞 04342-233803 | ✉️ jrdpi.rcs@gmail.com
✅ பணியிடங்கள் எதிர்நோக்கும் இளையோர் மற்றும் பெண்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.
✅ தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.
✅ தேர்ச்சி பெற்றவர்கள் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் பணி நியமனம் பெறுவார்கள்.

.jpg)