தருமபுரி, ஆக 14 | ஆடி 29 -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (14.08.2025) “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார்.
கூட்டத்தின் போது, “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டங்களின் செயல்பாடுகள், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கமளித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி காயத்ரி (தருமபுரி), திரு. சின்னுசாமி (அரூர்) உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.