அரூர், ஆக. 25 | ஆவணி 9 :
இதனால் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு, பாதையை மீட்கக் கோரி முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த சமரசமும் எட்டப்படவில்லை.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் தெரிவித்ததாவது: “பூதிநத்தம் கிராம மக்களின் வசதிக்காக கால்வாயின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட்டு சாலை வசதியும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டன. இது பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை. தற்போது ஒரு குடும்பம் மட்டும் சொந்த உரிமை எனக் கூறி தடைகள் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது. மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வட்டாட்சியர் உடனடியாக தலையிட்டு சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும்” என்றார்.
.gif)

