Type Here to Get Search Results !

தருமபுரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் – 543 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி, ஆகஸ்ட் 25 (ஆவணி 9):

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 543 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சாலை, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா வழங்கல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனுக்கள் பெறப்பட்டன.


மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு விரைந்து தீர்வு வழங்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies