Type Here to Get Search Results !

அரூரில் தூய்மை பணியாளர்களுக்கான நில தானம் வணங்கிய இருவர்; பொதுமக்கள் பாராட்டு.


அரூர், ஆக 25 | ஆவணி 9 -

அரூர் பேரூராட்சி 3வது வார்டு, வர்ண தீர்த்தம் சுடுகாடு சாலை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் தூய்மை பணியாளர்களுக்காக, சேலத்தைச் சேர்ந்த திரு. வாசுதேவன் மற்றும் திரு. ஞானவேல் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 18 சென்ட் நிலத்தை பேரூராட்சிக்குத் தானமாக வழங்கினர்.

மேலும், தூய்மை பணியாளர் குடியிருப்பு அருகிலுள்ள 3வது வார்டு பகுதி சர்வே எண் 136/2பி-யில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் கடை கட்டுவதற்கான தடையில்லா அனுமதி சான்று பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3வது வார்டு உறுப்பினர் முஸ்ரத் காதர் பாஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்கள் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் அ.இ.அ.திமுக அரூர் ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு. ஆர்.ஆர். பசுபதி, அ.இ.அ.திமுக நகரச் செயலாளர் திரு. ARRS பாபு (எ) அறிவழகன், 8வது வார்டு உறுப்பினர் கலைவாணன், 15வது வார்டு உறுப்பினர் பூபதி, 18வது வார்டு உறுப்பினர் ரா. பெருமாள் உள்ளிட்டோர், மேலும் பல தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies