தருமபுரி, ஆக 25 | ஆவணி 9:
இந்த சம்பவம் பரவலாக வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மனு அளித்தன. தமிழ்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் முனுசாமி அவர்கள் தலைமையில் மனு வழங்கப்பட்டது.
மனுவில், பள்ளி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போது படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் உடனடியாக மாற்றி சேர்க்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கி, காவல் துறை சிறப்பு குழுவை அமைத்து இதுபோன்ற பிற சம்பவங்களையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இம்மனுவுக்கு தமிழ்புலிகள் கட்சியுடன் தலித் விடுதலை இயக்கம், இந்திய மூலநிவாசி காவல்படை, ஆதிதமிழர் கட்சி, மே 17 இயக்கம் மற்றும் பூர் ஆர்மி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.