Type Here to Get Search Results !

நாளை (ஆக. 26) திமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் – வழக்கறிஞர் மணி MP அறிவிப்பு


தருமபுரி, ஆக 25 | ஆவணி 9 -

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் வரும் 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு அக்கட்சியின் மாவட்ட அலுவலகம், கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற உள்ளது.


இந்த கூட்டத்தில் திமுகவின் மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ் தலைமையேற்க, மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, எம்.பி., சிறப்புரையாற்றவுள்ளனர். தேர்தல் பணிகள், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.


இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, எம்.பி., தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies