இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிகளுக்கேற்ற பணியிடங்கள் உள்ளன. இந்த முகாம் முழுக்க இலவசமாக நடைபெறுகிறது. மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆகையால், தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

.jpg)