Type Here to Get Search Results !

ஏழ்மையில் உயிரிழந்த அசாம் இளைஞரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி, ஆக. 19 | ஆவணி 3 –


ஓசூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாதுகாவலராக (Security) பணியாற்றி வந்தார். சாலையை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


இவரது அடையாளம் மற்றும் குடும்பத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லையெனவும், அவருடன் பணிபுரியும் சில நண்பர்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இந்த சூழ்நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான பொறுப்பை “மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர்” ஏற்றனர்.


ஓசூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார், மை தருமபுரி தலைவர் சதீஷ்குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் செந்தில், அய்யா மாதேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் ரோட்டரி எரிவாயு தகனம் மையத்தில் எரியூட்டப்பட்டது.


இதுவரை மை தருமபுரி அமைப்பின் மூலம் மொத்தம் 160 புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “மரணிப்பவர்களுக்குக் கூட மனிதநேயம் பகிர வேண்டும்; மனிதநேயம் போற்றப்பட வேண்டும்” என அமைப்பினர் வலியுறுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies