இண்டூர், ஆக. 25 | ஆவணி 9 -
மருதம் நெல்லி கல்விக் குழுமம், நல்லானூரில் செயல்படும் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், “டேலி மென்பொருள் மற்றும் அதை சார்ந்த எதிர்கால வேலைவாய்ப்புகள்” குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்விக் குழுமத் தாளாளர் டாக்டர் கா. கோவிந்த் தலைமை வகித்தார். குழும செயலாளர் காயத்ரி கோவிந்த் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். செந்தில் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் சி. பரஞ்சோதி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சி கியூப் டெக்னாலஜி பயிற்றுனர் திரு. வெங்கடேஷ் கலந்து கொண்டு, டேலி மென்பொருள் பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்வை வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை திருமதி கோமதி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் கண்ணபிரான் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ. இம்தியாஸ் ஒருங்கிணைத்தார்.
பயிலரங்கில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.