தருமபுரி, ஆகஸ்ட் 21, 2025 (ஆவணி 5):
இந்த விருதிற்கான விண்ணப்பம் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட, தமிழ்நாட்டில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர் நிலவரப்படி) சார்பில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விருதிற்கான தகுதிகள்
-
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியிருக்க வேண்டும்.
-
பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் பங்களித்திருக்க வேண்டும்.
-
சிறுவர் திருமணங்களை தடுத்திருக்க வேண்டும்.
-
கல்வி, விளையாட்டு, கலை அல்லது பிற துறைகளில் தனித்துவமான / சிறப்பான சாதனை புரிந்திருக்க வேண்டும்.
-
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை ஒழிக்க ஓவியம், கவிதை, கட்டுரை போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
-
“ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும்” என்று கருதப்படும் துறைகளில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் விதம்
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை நேரில் சந்திக்கலாம் அல்லது தொலைபேசி எண்: 04342 – 233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
.gif)

.jpg)