தருமபுரி, ஆகஸ்ட் 21, 2025 (ஆவணி 5):
இந்த ஆண்டின் போட்டிகள் 5 பிரிவுகளில் நடைபெறவுள்ளன. அதாவது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவு போட்டியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் 5 பிரிவுகளில் 37 விளையாட்டுகள் 53 வகைகளில் நடைபெறவுள்ளன. தருமபுரி மாவட்ட அளவிலான போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களது சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகள் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை, அரசு ஊழியர்கள் தங்கள் பணியிட அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை, பொதுப்பிரிவு போட்டியாளர்கள் ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்கள் மற்றும் தாமதமாக வருபவர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். போட்டியாளர்கள் அனைவரும் காலை 8.00 மணிக்குள் போட்டி நடைபெறும் இடங்களில் வருகை தர வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களுக்கு முறையே ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசுத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும் வெற்றியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டித் தேதிகளின் விவரங்களின்படி, பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் 02.09.2025 அன்று, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் 03.09.2025 அன்று, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் 04.09.2025 அன்று நடைபெறும். பொதுப்பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகள் 06.09.2025 அன்று, அரசு ஊழியர்களுக்கான தடகளப் போட்டிகள் 08.09.2025 அன்று நடைபெறும்.
இறகுபந்து போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு 26.08.2025, மாணவிகளுக்கு 29.08.2025, கல்லூரி மாணவர்களுக்கு 30.08.2025, அரசு ஊழியர்களுக்கு 01.09.2025 (ஆண்கள்), 02.09.2025 (பெண்கள்), பொதுப்பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 03.09.2025 அன்று நடைபெறும். கூடைப்பந்து, வாலிபால், கோ-கோ போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு 26.08.2025, மாணவிகளுக்கு 29.08.2025 அன்று நடைபெறும். கபாடி போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு 26.08.2025, மாணவிகளுக்கு 02.09.2025, கல்லூரி மாணவர்களுக்கு 29.08.2025, மாணவிகளுக்கு 30.08.2025, அரசு ஊழியர்களுக்கு 07.09.2025, பொதுப்பிரிவு ஆண்களுக்கு 10.09.2025, பெண்களுக்கு 30.08.2025 அன்று நடைபெறும்.
மேஜைப்பந்து போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு 26.08.2025, மாணவிகளுக்கு 28.08.2025, கல்லூரி மாணவர்களுக்கு 29.08.2025 அன்று நடைபெறும். கால்பந்து போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு 09.09.2025, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு 11.09.2025, கல்லூரி மாணவர்களுக்கு 12.09.2025 அன்று நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான பூப்பந்து போட்டிகள் 29.08.2025 அன்று நடைபெறும்.
கேரம் போட்டிகள் செந்தில் மெட்ரிக் பள்ளியில் 28.08.2025 அன்று பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, 29.08.2025 அன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, 30.08.2025 அன்று அரசு ஊழியர்களுக்கு, 01.09.2025 அன்று பொதுப்பிரிவுக்கு நடைபெறும். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோட்டில் ஹாக்கி போட்டிகள் 29.08.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கு, 30.08.2025 அன்று மாணவிகளுக்கு, 01.09.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் நடைபெறும்.
கிரிக்கெட் போட்டிகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆட்காரம்பட்டியில் 28.08.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கு, 02.09.2025 அன்று மாணவிகளுக்கு, 30.08.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கு, 03.09.2025 அன்று கல்லூரி மாணவிகளுக்கும் பொதுப்பிரிவு பெண்களுக்கும், 04.09.2025 அன்று பொதுப்பிரிவு ஆண்களுக்கும் நடைபெறும்.
சிலம்பம் போட்டிகள் மவுண்ட் லிட்ரா ஜி பள்ளி, சோகத்தூரில் 28.08.2025 அன்று பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, 29.08.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கு, 30.08.2025 அன்று பொதுப்பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும். அதேபோல் ஹேண்ட்பால் போட்டிகள் 28.08.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கு, 29.08.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கு, 30.08.2025 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் 09.09.2025 அன்று தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். இதில் தடகளம், இறகுபந்து, மேஜைப்பந்து, எறிபந்து, அடோப்டட் வாலிபால் மற்றும் கபாடி போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடத்தப்படும்.
இவ்வாறு தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 2025-26ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் 26.08.2025 முதல் 12.09.2025 வரை அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

