தருமபுரி, ஆக 08 | ஆடி 23 -
தருமபுரி மாவட்டத்தில், அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில், 1 முதல் 19 வயது குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது பெண்கள் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.
மாத்திரை அளவு:
-
1–2 வயது குழந்தைகள்: அரை மாத்திரை (200 மி.கி.)
-
2 வயது முதல் 19 வயது குழந்தைகள் மற்றும் 20–30 வயது பெண்கள்: முழு மாத்திரை (400 மி.கி.)
அல்பெண்டசோல் மாத்திரை குடற்புழுக்களை நீக்குவதோடு, இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நினைவாற்றல், கற்றல் திறன், உடல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 1–19 வயதுடைய 3.91 இலட்சம் குழந்தைகளுக்கும், 20–30 வயதுடைய 1 இலட்சம் பெண்களுக்கும் — மொத்தம் 4.92 இலட்சம் பேருக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையில் 2,023 அங்கன்வாடி பணியாளர்கள், 1,644 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், 244 சுகாதாரத்துறை பணியாளர்கள், 123 ஆஷா பணியாளர்கள் என மொத்தம் 2,011 பேர் பங்கேற்கின்றனர்.
பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்தி, குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்க மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.