தருமபுரி, ஆகஸ்ட் 08, 2025 | ஆடி 23 -
மூன்று மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 19 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு “குட்வில் அகாடமி” மூலம் வழங்கப்படுகிறது. தொடக்க விழாவில் கலந்து கொண்ட 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், சமூக மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்கவும் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் பொருள், பணம் அல்லது களப்பணி மூலமாக பங்களிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, உதவி திட்ட அலுவலர் திருமதி மஞ்சுளா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.