Type Here to Get Search Results !

ஆதரவின்றி உயிரிழந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி, ஆக 25 | ஆவணி 9 -

தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளி–கும்ளாபுரம் சாலையில் நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்திலேயே காயமடைந்த அவரை காவல்துறையினர் மீட்டு, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


இவரின் அடையாளம் குறித்து போலீசார் விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஆதரவின்றி இறந்த அவரது உடலை தேன்கனிக்கோட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் சையத் ஜாபர், தன்னார்வலர் ஜெய்சூர்யா ஆகியோர் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.


மை தருமபுரி அமைப்பின் வழியாக இதுவரை 161 ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies