பென்னாகரம், ஆக 25 | ஆவணி 9 :
பென்னாகரம் பகுதியில் பிரபல மருத்துவராக பணியாற்றி வரும் 70 வயதான டாக்டர் தியாகராஜன், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதோடு பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் இடம் பெற்றுள்ள பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு, அவர் தலா ₹20,000 ஊக்கத்தொகை வழங்கினார்.
மேலும், பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாங்கரை அரசு பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கும் தலா ₹30,000 நிதியுதவி வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் தொடர்ந்து முன்னேறுவதற்காக, எதிர்காலத்திலும் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவப் படிப்பில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் டாக்டர் தியாகராஜன் உறுதியளித்தார்.
.gif)

