Type Here to Get Search Results !

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் நிதி மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கம்.


இண்டூர், ஆக. 21 | ஆவணி 5 - 


மருதம் நெல்லி கல்விக் குழுமம் சார்பில், நல்லானூரில் உள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக நிதி மேலாண்மை குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்விக் குழுமத் தாளாளர் டாக்டர் கா. கோவிந்த் தலைமை வகித்தார். குழும செயலாளர் காயத்ரி கோவிந்த், நிர்வாக இயக்குநர் எம். செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் சி. பரஞ்சோதி வாழ்த்துரை வழங்கினார்.


சிறப்பு விருந்தினராக, பெங்களூரில் இயங்கி வரும் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி மேலாளர் பிரேம் தாஸ் கலந்து கொண்டு, நிதி மேலாண்மை மற்றும் வங்கிகளின் மூலமாக நிதி பெற்று தொழில் தொடங்குதல் தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் அ. இம்தியாஸ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார். கருத்தரங்கில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளின் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies