தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் தொண்டர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, தர்மபுரி மாவட்டம் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் மாண்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் செல்வபாண்டியன் தலைமையிலான மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தொடங்கியது. தொடர்ந்து, கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வை ஆங்கிலத்துறை தலைவர் பேரா. முனைவர் கோவிந்தராஜ், புவியமைப்பியல் துறை முனைவர் நந்தகுமார், மற்றும் முனைவர் வித்யாசாகர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் ஒருமனதாக கலந்துகொண்டு, கலைஞரின் சமூக நீதி மற்றும் கல்விக்காக செய்த பணிகளை நினைவுகூர்ந்தனர்.