பாலக்கோடு, ஆக.8 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் பாரம்பரிய வாரிசுமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையிலானது. மாவட்ட திமுக பொருளாளர் முருகன், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் பி.எல்.ரவி, ஒன்றிய அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின்போது, கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திமுக தொண்டர்கள் அவரது சாதனைகள் மற்றும் திராவிட இயக்கத்தில் அவருடைய பங்களிப்பை நினைவுகூர்ந்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, கிளைச் செயலாளர்கள் ராஜீ, சரவணன், மியான், ராமமூர்த்தி, ஆறுமுகம், அணிகளின் அமைப்பாளர்கள் சந்ரு, குமரன், வார்டு கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்தி மோகன், சரவணன், ரூஹித், சாதிக், தீபா, சரவணன், சக்திவேல் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு நினைவேந்தலை அனுசரித்தனர்.