அரூர், ஆகஸ்ட் 15 | ஆடி 31 –
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு போட்டிகளில் பல்வேறு இடங்களைப் பெற்று சிறப்பான சாதனையை நிகழ்த்தினர்.
ஜூனியர் பிரிவில் அபூபக்கர் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். சீனியர் பிரிவில் அப்துல் ரகுமான் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் முதலிடம், 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்றார். வெற்றிமாறன் 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். போல்வால்ட் போட்டியில் பிரவின் முதலிடம், விசால் இரண்டாம் இடம் பெற்றனர். குண்டு எறிதலில் சிங்காரவேலன் முதலிடம், சீனிவாசன் இரண்டாம் இடம் பிடித்தனர். அரண் நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடம் மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார். அகிலன் நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடம் மற்றும் மும்முறை தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்றார். ஜெகதிஸ்வரன் நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடம், தருண்குமார் மும்முறை தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டியில் ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகள் அனைத்திலும் முதலிடம் பெற்றனர். ஆக்கி போட்டியில் ஜூனியர் பிரிவு முதலிடம், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகள் இரண்டாம் இடம் பெற்றன. வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர். மற்ற போட்டிகளில் கேரம் போட்டியில் விக்ரம் பிரபு முதலிடம், சதுரங்க போட்டியில் தர்சன் இரண்டாம் இடம், நேசிப்பது போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமையில் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களைப் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.