நல்லம்பள்ளி, ஆக 13 | ஆடி 27 -
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில், “மாபெரும் தமிழ்க்கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை” நிகழ்ச்சி இன்று (13.08.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு, உயர் கல்வி, சுயதொழில், வங்கிக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் மற்றும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சித் தலைவர், மாணவர்களுக்கு தமிழ் மொழி, மரபு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகளை அறிமுகப்படுத்துவதோடு, எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டி புத்தகங்களையும் வழங்கினார்.
விடுதலைப் போரில் வீரத்தமிழகம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன் சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டைப் பற்றிப் பேசிய 5 மாணவர்கள் மற்றும் கேள்வி–பதில் பகுதியில் சிறந்த 5 மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்ளிட்டோர், மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.