தருமபுரி, ஆக 05 | ஆடி 20 -
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் கைம்பெண்கள் (விதவைகள்) இத்துவரை குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது விபரங்களை பதிவு செய்யாமல் இருந்தால், அவர்கள் உடனடியாக ஒட்டப்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே தங்களை பதிவு செய்திருந்தாலும், தங்களது வாக்காளர் அடையாள எண்ணை சமர்ப்பித்து பதிவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இது எதிர்காலத்தில், குறிப்பாக தேர்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை எளிமைப்படுத்தும் வகையில் பெரிதும் உதவும். மீண்டும் அரசு அல்லது தனியார் துறைகளில் மறுவேலைவாய்ப்பு பெற்று பணிபுரிந்து வரும் முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினரும் இந்த தகவலை உள்வாங்கி, உரிய பதிவு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.