தருமபுரி, ஆக.7 | ஆடி 22 -
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.25 லட்சத்தில் பூங்கா, ரூ.212.60 லட்சத்தில் 1.64 கி.மீ. தார் சாலை, ரூ.250 லட்சத்தில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம், ரூ.142.46 லட்சத்தில் நவீன எரியூட்டு மயானம், ரூ.22 லட்சத்தில் குன்னன் குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 15-ஆவது நிதிக்குழு மானியம் திட்டத்தில், புதிய தினசரி சந்தை (₹49.30 லட்சம்), குடிநீர் திட்டங்கள் (₹220.00 லட்சம்), திடக்கழிவு மேலாண்மை (₹205.00 லட்சம்), தார் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் (₹341.00 லட்சம்), தெருவிளக்குகள் (₹15.00 லட்சம்), பயோகேஸ் மையம் (₹170.00 லட்சம்) ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளன.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சோலார் மின் சிக்கன விளக்குகள் (₹30.00 லட்சம்), பேருந்து நிலைய புனரமைப்பு (₹134.00 லட்சம்), நகராட்சி பள்ளிகளுக்கான டேபிள் பெஞ்ச்கள் (₹60.00 லட்சம்), மழைநீர் வடிகால் (₹36.80 லட்சம்), எரிவாயு தகன மேடை புனரமைப்பு (₹13.80 லட்சம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் திட்டத்தில் சுகாதார மையம் கட்டிடம் (₹40.00 லட்சம்), ஆதரவற்றோர் தங்கும் விடுதி (₹60.00 லட்சம்) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ₹278.00 லட்சத்தில் 8.089 கி.மீ. தார் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (SUIDF) திட்டத்தில் ₹437.06 லட்சத்தில் அனைத்து வார்டுகளிலும் LED தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ₹52.98 லட்சத்தில் கழிப்பறைகள், ₹306.00 லட்சத்தில் Bio-Mining மூலம் குப்பை அகற்றும் பணி, ₹85.00 லட்சத்தில் பொருட்கள் மீட்பு கூடம் (MRF), ₹16.00 லட்சத்தில் STP Decanting Facility ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய திட்டங்கள் தருமபுரி மாவட்ட நகராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவை தொடரும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.