தருமபுரி, ஆக 31 | ஆவணி 15 :
தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகே அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த ஆதரவற்ற 90 வயது மூதாட்டியின் குடிசை வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. வாழ இடமின்றி தவித்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் அவரின் நிலையை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இதனை கவனித்த பாப்பாரபட்டி தவெக நகரச் செயலாளர் ரமேஷ், நண்பர்களுடன் சென்று முதலில் போர்வை, தலையானை, பாத்திரங்கள் மற்றும் உணவுப்பொட்டலங்களை வழங்கினார். மேலும் விரைவில் புதிய வீடு கட்டிக்கொடுக்குவோம் என்ற வாக்குறுதியும் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள், சுமார் ரூ.1.5 இலட்சம் செலவில், பேன், மின்விசிறி, மின்சாரம், சமையலறை போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடினை கட்டித் தந்து, இன்று (31.08.2025 – ஆவணி 15) அந்த மூதாட்டிக்கு சாவியை ஒப்படைத்தனர். புதிய வீடு கிடைத்ததில் மூதாட்டி மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அதற்கு “தளபதி அன்பு இல்லம்” என பெயரிடவும் சம்மதம் தெரிவித்தார். இந்த மனிதநேயச் செயலுக்காக அப்பகுதி பொதுமக்கள் தவெக நிர்வாகிகளை பாராட்டினர்.
- தகடூர்குரல் செய்திகளுக்காக தருமபுரி செய்தியாளர் – பி. முருகேசன்