தருமபுரி, ஆகஸ்ட் 13 | ஆடி 27 –
தருமபுரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய ஸ்ரீ மருதவானேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு 49ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து கூழ் ஊற்றும் விழா நடைபெற்றது. இதையடுத்து, கோயிலிலிருந்து ஸ்ரீ விருந்தாடி அம்மன் கோவில் நோக்கி பூ கரகம், மாவிளக்கு எடுத்தும், பம்பை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். தீச்சட்டி, காளி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் சக்தி அழைப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரவிருக்கும் நிகழ்ச்சிகள்:
-
வியாழக்கிழமை 14.08.2025 – "வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது சொத்து சுகமா? சொந்த பந்தமா?" என்ற தலைப்பில் மாபெரும் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம்.
-
வெள்ளிக்கிழமை 15.08.2025 – 509 பெண்கள் கலந்து கொள்கின்ற திருவிழாக்கு பூஜை; இதில் மஞ்சள், குங்குமம், வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்படும்.
-
சனிக்கிழமை 16.08.2025 – 108 சங்காபிஷேகம், ஆராதனை, மற்றும் மஞ்சள் நீராட்டு விழா.
இவ்விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.