தருமபுரி, ஆக 13 | ஆடி 27 -
தருமபுரி மாவட்டத்தில் வரும் 15.08.2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், மேலும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனை கூடங்கள் அனைத்தும் 14.08.2025 இரவு 10.00 மணி முதல் 16.08.2025 காலை 12.00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
இந்த காலப்பகுதியில் எந்தவொரு விதத்திலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது. விதிமுறைகளை மீறி அல்லது கள்ள மதுவிற்பனையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.