பெங்களூரு, ஆக. 25 (ஆடி 9):
பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் மாண்புமிகு சோமண்ணா அவர்களை பெங்களூரு இல்லத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர். கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் போன்ற தென்னக மக்களுக்கு அவசியமான முக்கிய ரயில்கள் பொம்மிடியில் நிறுத்தம் பெற வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
கர்நாடக ரக்ஷன வேதிகா கட்சியின் மாநில தலைவர் பிரவீன் குமார் ஷெட்டி, மாநில பொதுச் செயலாளரும் பொம்மிடி பகுதியைச் சேர்ந்த சந்திரவேல், சமூக ஆர்வலர் கோவிந்தன் என்கின்ற ராஜேஸ்வரன் ஆகியோர் இம்மனு நடவடிக்கைகளில் பங்கு பெற்றனர். அத்துடன், பொம்மிடி பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலச்சங்கத்தின் செயலாளர் பா. ஜெபசிங் மற்றும் துணைச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் அமைச்சரை நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்.